Will Smith Oscar விருது நிகழ்ச்சியின் போது ஒரு நகைச்சுவை நடிகர் தன் மனைவியின் உடலை வைத்து comedy செய்ததால் மேடைக்கு சென்று அறைந்து விட்டு வந்திருக்கிறார் என்று செய்து . இதை பலர் சரி என்றும் தவறு என்றும் ஒரு சிலர் Oscar விருதை வாங்கும் கருப்பு (Black )நடிகர்கள் அரிது . இதில் வன்முறை வேறா ? என்று கறுப்பின மக்களையும் வன்முறையையும் தொடர்புபடுத்தும் ஒரேதன்மைப்படுதலையும் பார்க்கலாம் . Will Smith செய்தது சரியா தவறா ? என் கருத்துக்களை பதிவிடுகிறேன் . Body Shaming (உருவ கேலி )யை பற்றி ஏற்கனவே ஒரு பதிவை இங்கு கொடுத்திருக்கிறேன் . ஒரு பெண்ணின் உடல் அமைப்பையோ , நிறத்தையோ , மற்ற உடல் சார்ந்த விஷயங்களை வைத்து கேலி செய்வதை Body Shaming (உருவ கேலி )என்று குறிப்பிடுகிறோம் . இதனால் பெண்களுக்கு ( ஆண்களுக்கும் ) மனஉளைச்சல் , மனசோர்வு , PTSD , மனபதட்டம் போன்ற மனப்பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கின்றது . உண்மையில் இந்த வகை நகைச்சுவையோ /கேலிய verbal violence (சொல் சார்ந்த வன்முறையாகவே நாம் கருத வேண்டும் ). வன்முறை என்றால் என்ன ? உடல் அளவிலோ மனதளவிலோ ஒருவரை தாக்கி அவர் துன்புற செய்வதாகும் . அதனால் verbal violence (சொல் சார்ந்த வன்முறை ) physical violence (உடல் சார்ந்த வன்முறைக்கு இணையானதே ).
            நாம் இங்கு எந்த வகை வன்முறையும் கூடாது என்பதே முதல் கருத்தாக கொள்கிறோம் . இருந்தாலும் ஒருவர் சொற்களால் ஒரு பெண்ணை அதுவும் தன் மனைவிவை கேலி செய்யும் போது ஒரு அறத்தொடு செயல்படும் மனிதனின் எதிர்வினை செயலாகத்தான் பார்க்க முடிகிறது . ஆனால் ஏனோ உருவ கேலி செய்த விஷயத்தை பெரிதாக பேசாமல் அது என்னமோ வன்முறையே இல்லை வெறும் நகைச்சுவை அல்லது கேலி என்பது போலவும் Will Smith செய்தது தான் வன்முறை என்றெல்லாம் பதிவிடுவது தவறு .
          அந்த பெண்மணிக்கு உரிய பிரச்னையை அறியாமல் அதை கேலியாக செய்தது in very bad taste . அவருக்கு alopecia எனும் பிரச்சனை உள்ளது . இன்னும் சொல்ல போனால் chemotherapy எடுத்து கொள்ளும் cancer patients க்கும் முடி உதிர்ந்து இருக்கும் பிரச்சனை இருக்கும் . இன்னும் சொல்ல போனால் ஒரு ஆணுக்கு முடி இல்லாமல் bald ஆக இருப்பதை யாரும் பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டார்கள் . ஒரு பெண் என்றவுடன் அவள் இப்படி தான் இருக்க வேண்டும் என முடிவெடுப்பதற்கு இவர்கள் யார் ?
           இனிமேலிருந்தாவது ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்வதை தவிர்த்தால் நல்லது . Will Smith கொடுத்த அறையின் மூலம் அவர் வலி புரிந்து கொள்ள முடிகிறது .  

Leave a Reply

Your email address will not be published.