யார் இந்த பாத்திமா ஷேக் Fatima Sheikh ? தெரிந்துகொள்வோம் !அவருக்கு இன்று பிறந்த நாளாமே !இன்று பாத்திமா ஷேக் அவர்களின் பிறந்தநாள் ( January 9 th) . அவர் ஒரு பெரும் சமூக சீர்திருத்தவாதி . Google அவர் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது . அவரை பெண்ணியத்தின் சிகரமாக கூட கருதலாம் . நம் நாட்டின் முதல் முஸ்லீம் ஆசிரியர் அவரே .pune வில் 1831 ஆம் ஆண்டு இந்த நாள் 9 th ஜனவரி தேதியில் பிறந்த அவர் மற்ற சமூக சீரமைப்புவாதிகளோடு சேர்ந்து பெண்களுக்கென்ற முதல் பள்ளி மற்றும் நூலகத்தையும் தொடங்கினார் !

 

   Phule தம்பதியினர் ( Jyotirao Phule – Savitribai Phule) அந்த காலத்தில் சாதி எதிர்ப்பு கொள்கை மற்றும் தீண்டாமை ஒழிப்பு என்று பல சமூக சீர்திருத்தங்களை செய்து கொண்டிருந்தனர் .அந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு கல்வி கொடுத்ததற்காக Phule தம்பதியினர் வீட்டை விட்டே விரட்டப்பட்டார்கள் போலும் ! நம் பாத்திமா ஷேக் என்பவரே அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு பள்ளியும் தொடங்கினார்களாம் . எப்படிப்பட்ட அருமையான செயல் அல்லவா ? நாம் பாராட்டி போற்ற வேண்டாமா ? நிச்சயமாக … அவர் புகழ் இன்றும் என்றும் நிலைத்து நிற்க நம் வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

Leave a Reply

Your email address will not be published.