பேஜ் ஆணை (Page Act )1875 என்றால் என்ன என்று தெரியுமா ?
அமெரிக்காவில் இந்த ஆணை சீனாவிலிருந்து பெண்கள் மட்டும் குடியேறுவதை தடுத்தது இந்த Page Act 1875.
        ஆனால் இதெல்லாம் பொருட்படுத்தாமல் Mabel Ping Hua Lee எனும் பெண்மணி பத்தாயிரம் மக்கள் கொண்ட பேரணியை 1912 ஆம் ஆண்டு நியூ யோர்க் கில் பெண்கள் வோட்டுரிமைக்காக நடத்தினார் .இது தவிர பல சொற்பொழிவுகளையும் ஆற்றினார் .என்ன கொடுமை என்றால் பெண்களுக்கு 1917 ஆம் ஆண்டு நியூ யோர்கில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தும் கூட Chinese Exclusion Act எனும் ஆணையால் Lee யால் வோட்டு போட முடியவில்லை ! என்றாலும் காலிஃபோர்னியாவில் 1912 ஆம் ஆண்டு பெண்களுக்கு வோட்டுரிமை கிடைத்ததும் Tye Leung Schulze என்பவர் அமெரிக்காவில் முதல் சீன பெண்மணியாக வாக்களித்தார். நான் இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் பெண்களிலேயே எல்லா பெண்களுக்கும் சமமான சமூக ஏற்றுதல் இருப்பதில்லை . நம் நாட்டில் தலித் பெண்களுக்கு double jeopardy இருப்பது போல . இந்த பார்வையில் பதிவுகள் தொடரும் ….

Leave a Reply

Your email address will not be published.