திருமணங்கள் பெண்களை அடிமை படுத்தவே உருவாக்கப்பட்டது என்றெல்லாம் தொடர்ந்து பதிவுகளை எழுதி வந்தாலும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது அல்லவா ? இதெல்லாம் நம் சமூகம் ஏற்க , பெண்கள் விழுப்புணர்வு பெற , திருமணங்கள் தான் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு , 20 தாண்டியதும் ஒரு மைல்கல் என்றெல்லாம் இருக்கும் நிலைகள் மாற இன்னும் பல பல ஆண்டுகள் உள்ளன . மேலை நாடுகள் போல சேர்ந்து வாழும் கலாச்சாரம் வந்தாலும் கூட தன் காதலனின் தாயுடன் உள்ள dynamics எப்போதும் இதே போல் தான் இருக்கும் . இதை நான் 20 ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்து பார்த்து புரிந்த அனுபவத்தில் சொல்கிறேன் .ஆதலால் கணவனுடைய தாயை கையாளும் கலையை பெண்கள் கற்றுக்கொண்டால் அவர்கள் வாழ்வு இனிமையாக இருக்கும் . என்னிடம் ஆலோசனை கேட்கும் பல பெண்கள் மற்றும் நாம் தினம் நம்மை சுற்றி பார்க்கும் பெண்களும் சரி மாமியார் பிரச்னையை பெரிய தலைவலி போல் பேசுவதையும் அதுவே அவர்களுக்கு பெரும் மனஉளைச்சல் கொடுப்பதையும் பார்க்கலாம் .தனித்தனியாக பார்த்தால் மாமியார் எனும் பெண்மணியும் மருமகள் எனும் பெண்மணியும் சிறந்த குணங்களும் அன்பும் கொண்ட பெண்களாகவே இருக்க கூடும் . ஆனால் அவர்கள் dynamics இல் தான் பிரச்சனையே உள்ளது ! “common object of love “அதாவது இரண்டு பெரும் அதிக அளவில் அன்பு செலுத்தும் ஆண்மகனை வைத்தே இந்த power struggle நடக்கின்றது ! என்னதான் இருந்தாலும் இதுவும் people management எனப்படும் soft skills இல் அடங்கும் . மாமியாரை கையாளும் கலையை கற்றுக்கொள்வது luxury அல்ல . இன்றைய பெண்களின் அத்யாவசிய தேவை .

1) பல பெண்கள் திருமணம் முடிந்த உடனே ஒரு ஆர்வ கோளாறில் மாமியாரை என் தாயை போல நினைத்து கொள்வேன் . தாயுடன் இருப்பது போல நடந்து கொள்வேன் என்று சொல்வார்கள் . இது தவறான அணுகுமுறை ! ஒரு கடினமான விஷயம் என்னவென்றால் உங்கள் தாயிடம் உள்ள unconditional love மாமியாருடன் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் தான் முடியும் . மாமியார் கணவனின் தாய் என்ற இடைவெளியும் மரியாதையும் மிக முக்கியம்.

 2)எக்காரணத்தை கொண்டும் ஒருவரின் தாயை பற்றி அவர் மகனிடம் தவறாக பேச வேண்டாம் .

 3) மாமியாரின் மனநிலையை புரிந்து கொள்வது அவசியம் . எங்கு தன் குழந்தை தன்னை விட்டு போய் விடுவானோ என்றும் எங்கே தன் ஆதிக்கம் இல்லாமல் போய் விடுமோ என்ற பயமுமே மாமியார்களின் நடவடிக்கைகளுக்கு பின்னால் அமையும் . இதை அறிந்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக பெண்களால் செயல்பட முடியும்.

4) நம் நாட்டில் சமூக அமைப்புகள் குறைவு என்பதால் தாயும் தந்தையும் குழந்தைகளின் கடமை என்பதை மறந்து விட வேண்டாம்.

5) எக்காரணம் கொண்டும் மரியாதை குறைவான பேச்சையோ அல்லது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளில் தலையிடுவதையோ அனுமதிக்க வேண்டாம்.

 6) எவ்வளவு கோபம் வந்தாலுமே மரியாதையை குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் . இதற்கு முதலில் நீங்கள் உங்கள் மனதை திடப்படுத்தி கொள்ள வேண்டும் . இதற்கு mindfulness போன்ற பயிற்சிகள் உதவும்.

 7) The communication must always be in the assertive mode. Not gravitating towards passiveness or aggressiveness.

8)கூடவே வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் கூட மாமியாரும் உங்கள் பொறுப்பு தான் என்பதை உணர்ந்து எப்படி இடைவெளியுடன் உங்கள் கடமைகளை செய்ய முடியும் என்று கவனித்து பாருங்கள்.

இந்த குறிப்புகளை மனதில் கொண்டு செயல்பட்டால் மாமியார் பிரச்னையை எளிதில் கையாள முடியும். Best wishes

Leave a Reply

Your email address will not be published.