ஒரு பெண்ணை விரும்பும் நாயகன் அவளிடம் பேசுவதற்காக நண்பனிடம் உதவி கேட்பான் . நண்பனோ அந்த பெண்ணிடம் 1000 காசு கொடுத்து புஷ்பாவிடம் பேசுமாறு அமைப்பது போல காட்சி . இதை அறிந்த புஷ்பா 5000 கொடுத்து ஒரு முத்தம் கொடுக்க சொல் என்றெல்லாம் அமைத்து அதுவும் அந்த பெண் தோழிகளின் வற்புறுத்தலால் முத்தம் கொடுக்க வருவது போலவும் பின்பு பின் வாங்குவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கும் .
           I was simply irked and disgusted with such portrayal of a lady lead !
          இதை எடுக்கும் போது அந்த காட்சி அமைத்த இயக்குனர் என்ன நினைத்திருப்பார் . இதில் நடிக்க அந்த நடிகர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர் ! ஓ சொல்றியா பாட்டுக்கு வந்த அளவு சர்ச்சை கூட இந்த காட்சிக்கு வரவில்லை ! உண்மையில் அந்த காட்சி புஷ்பாவின் காதலையும் அந்த பெண்ணையும் கொச்சைப்படுத்துவது மட்டும் இல்லை . பெண்களை பாலியல் பொருட்களாக மட்டுமே பார்க்க கூடிய சூழ்நிலைகளை வலுயுறுத்துகிறது !அது மட்டும் இல்லை . காதல் கொண்ட ஒரு இளைஞன் இப்படி கூட ஒரு பெண்ணை அணுக முடியும் என்ற கேவலமான யோசனையையும் நம் இளைஞர்களுக்கு கொடுக்கிறது .
         அந்த பெண் இதை மறுத்து திட்டுவது போல காட்சி அமைத்திருந்தால் கூட ஏற்று கொள்ள முடியும் . ஏதோ அந்த பெண்ணும் காதல் கொள்ளாத ஒருவனுக்கு 1000 மோ 5000 மோ கிடைத்தால் I love you உம் முத்தமும் ஒரு விஷயமே இல்லாதது போல கொடுப்பது போல அமைந்த காட்சிகள்
அதிர்ச்சியையும் அருவருப்பையும் என்ன தான் சொல்ல வராங்க என்ற எண்ணத்தையும் கொடுக்கிறது . இதை போன்று காதலையும் , பெண்களையும் கொச்சை படுத்தும் காட்சிகள் அமைந்த படங்களை கடுமையாக பெண்கள் எதிர்க்க வேண்டும் .
         We do not need any more objectification and sexualization in media of women in a society that is already unequal and skewed against women !

Leave a Reply

Your email address will not be published.