பாராட்டத்தக்க வேண்டிய விஷயம் பல பெண்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தது . அதற்கு பதிலடி கொடுத்த பெண்களை நன்றியுடன் வணங்குகிறோம் .இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் உருவ கேலி பற்றி இப்போதாவது மக்களுக்கு என்ன என் விழிப்புணர்வை கொண்டு வந்தது . உருவ கேலிஎனப்படும் body shaming மிக கொடிய வகையான வன்கொடுமை வகையை சார்ந்தது .பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படக்கூடிய தாக்குதல் தான் என்றராலும் ஆண்களும் இதற்கு விதிவிலக்கில்லை.
அழகு என்பது என்ன என்பதை நிர்ணயிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை . யார் சொன்னார்கள் ? உயரமாகவும் தோல் சிவப்பாகவும் இருக்கும் பெண்கள் அழகு என்றும் அல்லது ஒல்லியாக இருக்கும் பெண்கள் தான் அழகு என்றெல்லாம் சட்டம் வைத்தது யார் ?
இதற்கு நாம் திரையில் காணும் sterotyped நடிகர்களும் காரணம் என்று தான் சொல்வேன் . திரையில் பெரும்பாலும் பெண்களை ஒரு வகை sterotype இல் மட்டுமே காட்டுவது இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது . நடிகர் என்றால் யார் ? அவர் வேலை நடிப்பது . எப்படி ஒரு மருத்துவரோ ஆசிரியரோ வேலை செய்கிறாரோ அப்படி தான் ஒரு நடிகரும் . அவர் திரையில் இருப்பதால் அவர் திறனை போற்றாமல் உருவ கேலி செய்வது மிக மிக கீழ்த்தரமான ஒன்று மட்டும் இல்லை . அவ்வளவு கொடுமை வாய்ந்ததும் கூட !சரி . இந்த உருவ கேலியால் என்னென்ன மனப்பிரச்சனைகள் வரும் என்று பார்ப்போம் . மனஉளைச்சல் , மனசோர்வு , மனபதட்டம் , உடல் உருவ கலக்கம் ( body image disturbance) போன்ற பல பிரச்சனைகள் வரலாம் .
ஏதோ ஒரு நடிகரை சொன்னதால் எல்லோருக்கும் இன்று உருவ கேலியை பற்றி தெரிந்து விட்டது . ஆனால் உண்மையில் அன்றாட வாழ்க்கையில் எத்தனை பெண்களும் , மாணவர்கள் உட்பட வேலை செய்யும் பெண்களும் கூட அன்றாடம் சந்திப்பது இந்த உருவ கேலி . உடல் பருமனாக இருப்பது மருத்துவ பிரச்சனையே தவிர அழகு பிரச்சனை அல்ல . இதை முதலில் நாம் ஏற்று கொள்ள வேண்டும் . அழகு என்பதை உருவத்தோடு சம்பந்தப்படுத்துவையும் தவிர்க்க வேண்டும் . ஆனால் இதை பற்றி இப்பொழுது தானே நன்றாக தெரிந்து கொண்டோம் . இனி உங்களையோ மற்ற பெண்களையோ உருவ கேலி செய்பவர்களை கடினமாக தட்டி கேளுங்கள் பெண்களே !