கீழ்கண்ட நம் திரைப்பட பாடல்களை சற்றே கவனியுங்கள் . “குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி”“நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்கத் தான் பார்பீங்கநாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க”“நாங்க ஜீன்ஸ் பேண்டைத் தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்ட்டைத் தான் பார்ப்பீங்கநாங்க பேகி பேண்டைத் தான் போட்டாக்கா நீங்க வேட்டியைத் தான் தேடுவீங்க”“கண்ட இடம் தொடு நீஇது காதல் கொண்ட மேனிநான் அழகில் நூற்விழுக்காடு ; தலை சுத்தி போகும் தமிழ் நாடு கால் பட்ட இடம் எல்லாம் கட்ட எறும்புமொய்க்கும் அங்கே ஹா ஹா”இவையெல்லாம் ஆண்கள் item songs என்று அழைக்கக்கூடிய பாடலின் வரிகள் “item song” என்ற வார்த்தையே முதலில் தப்பு . 

     item என்றால் என்ன ? object அல்லது உருப்படி என்று தானே அர்த்தம் ? usage of this term அ யாராவது கேள்வி கேட்டார்களா? அப்படி கேட்டிருந்தால் ஏன் இன்னும் இந்த “கதைக்கு சம்மந்தம் இல்லா பாடல்களுக்கு” item songs என்று இன்னும் usage இல் இருக்கிறது ? இந்த term ஐ முதலில் ban செய்ய வேண்டாமா ? So ? பெண்களை item என்று குறிப்பிடுவது ok ஆனால் ஆண்களின் சபலத்தை பற்றி வரும் வரிகள் மட்டும் ok இல்லை அப்படித்தானே? மேல படித்தவை அனைத்தும் நம் தமிழ் சினிமாவில் வந்த பாடல் வரிகள் . எப்படி பார்த்தீர்களா ? இந்த பாடல் வரிகளில் ஒரு பெண்ணை பற்றியும் அவள் உடலை பற்றியும் அவள் ஒரு ஆணிடம் இருந்து எப்படி இன்னொரு ஆணிடம் தாவுகிறாள் என்றெல்லாம் கேவலமாக ஒரு பெண்ணை சித்தரிக்கும் வரிகள் இவை .இவை எல்லாவற்றையும் நாம் இயல்பாக கேள்வியோ சர்ச்சையோ செய்யாமல் பாதங்களை தட்டி ஏற்றுகொண்டோமே ! ஏன் ? பெண்ணை கேவலப்படுத்துதல் அல்லது கிண்டலடித்தல் நம்மில் ஊறிய ஒன்றாகி விட்டு அதை recognize கூட செய்யாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா ?சரி இப்பொழுது கூட O Solriyaa பாடலில் ஆண்களை பற்றி வரும் வரிகளால் எழும் சர்ச்சையை விட Samantha இந்த பாடலுக்கு நடனம் ஆடியதே பெரும் சர்ச்சையாக உள்ளது .

  சரி அப்படி என்னத்த தான் இந்த பாடல்ல எழுதிட்டாங்க அப்படினு பார்ப்போம் !“சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோடிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்கஆச வந்தா சுத்தி சுத்திஅலையா அலையும் ஆம்பள புத்தி” ஆமாம் உடையில் ஒன்றும் இல்லை தான் . சற்றே இதை reverse செய்து பார்ப்போம் ! ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் போது பெற்றோரும் சரி சமூகமும் சரி எவ்வளவு எண்ணற்ற முறைகள் ” இந்த குட்டை பாவாடையை அணிந்திருக்க வேண்டாம் . இதனால் தான் இதெல்லாம் நடக்குது” என்று victim shaming செய்து பாதிக்கப்பட்டோரையே குறை கூறி இருக்கிறது ? “இந்த மாதிரி அவிழ்த்து விட்டு போனா இப்படி தான் நடக்கும்” என்றெல்லாம் பெண்களை எவ்வளவு கட்டுப்பாடுகளுக்கு ஆளாக்கிறார்கள் ?கட்டுப்பாடுகள் மட்டும் இல்லீங்க . என்னமோ இந்த பாலியல் தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் பெண்கள் தான் பொறுப்பு மாதிரி பேசும் போது எங்கே போச்சு இந்த outcries எல்லாம் ? “கொழு கொழு உடம்போ குச்சி உடம்போசைஸ்ல ஒன்னும் இல்லைங்கஅல்வா மாதிரி அழக சுத்திஅள்ள துடிக்கும் ஆம்பள புத்தி”ஒரு விஷயத்தை உரக்க சொல்ல வேண்டும் .

  அது என்னவென்றால் அவள் ஆடையிலோ , உடம்பின் எடையிலோ ஒன்னும் இல்லை தான் . தவறுதலாக பார்த்தல் ஒரு ஆணின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது.இந்த பாடல் வரிகளில் வரும் male sterotyping பற்றி விவாதிக்கும் முன்னர் நாம் இவ்வளவு நாள் கேள்வி கேட்காமல் விட்ட மேற்கண்ட விஷயங்களை முதலில் கேள்வி கேட்போம்

Leave a Reply

Your email address will not be published.