இது கண்ணீர் மல்க கேட்டாள் அவள் . அவள் எனக்கு தெரிந்த ஒரு பெண் தான் . எப்பொழுதாவது வீட்டில் சில வேலைகள் செய்வாள். ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை பார்க்கும் பொழுது இந்த ஒரு கேள்வி தான் ” நான் என்ன செய்யணும் மேடம் “. அவளுக்கு நான் ஒரு மனநலமருத்துவராய் மட்டும் அல்லாமல் ஒரு சக மனிதராகவும் என்ன சொல்ல முடியும் ? அவள் கேட்கும் கேள்விக்கு அவளுக்கு பதில் நன்றாக தெரியும் . அவள் ஒவ்வொரு முறையும் கேட்கும் கேள்வி ” நான் அவனை விட்டு விடவா மேடம் ?” என்று ! உள்ளத்தால் மிகவும் அழகான பெண் . அவளுக்கு அப்படி ஒரு இடர் . அவள் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . ஒவ்வொரு நாளும் அவளுக்கு நரகம் தான் .தினம் ஒரு கூத்து . அவனுக்கு குடி பழக்கம் இருக்கு . இது ஒரு மருத்துவ பிரச்சனை தான் என்று அவளுக்கும் புரியும் . ஆனால் அது மட்டும் அல்ல அவள் இடர்கள் . இன்னும் பல பல . அவனுக்கென்று ஒரு வேலை கிடையாது . இன்னொரு பெண்ணும் துணையாக இருக்கிறாள் . இது இவளுக்கு மிகவும் வேதனை தர கூடிய விஷயம் தான் . அவனால் அவளுக்கு தினம் திட்டும் சண்டையும் குழந்தைகள் வேதனை படும் அளவிற்க்கு தினம் ஒரு சண்டை நடக்கும் . அவளுக்கு என்ன செய்யவேண்டும் என்று நன்கு தெரியும் . ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த கேள்வி வரும் “நான் என்ன செய்ய வேண்டும் மேடம்” என்று .மக்களில் இரு வகை உண்டு . அல்லது அப்படியும் பாகுபடுத்தலாம் . லட்சியவாகிகள் மற்றும் யதார்த்தவாகிகள் என்று . இதில் வெற்றி பெரும் கூட்டம் ஒன்றிருந்தால் அது யதார்த்தம் கலந்த லட்சியவாதிகள் தான் ! ஒரு நிமிடம் அந்த பெண்ணை கண்களை மூட சொன்னேன் . அப்படியே செய்தாள் . அவளுக்கு மனஉளைச்சலுக்கு அளவே இல்லை . அந்த ஒரு நிமிடம் நிம்மதியாக கண்களை மூடிய அவள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை கற்பனை செய்தாள் . அதில் அவன் கணவன் இல்லை . இது அவளுக்கும் தெரியும். “நான் என்ன செய்ய வேண்டும் மேடம்” . அவள் கேட்கும் கேள்விக்கு உங்கள் பதில்கள் ?அவளால் ஏன் அந்த நிம்மதியை தேட முடியவில்லை ? உங்கள் கருத்து என்ன?விவகாரத்தை ஒரு சமூகமாக நாம் எப்படி பார்க்கிறோம்?உறவுகள் என்பது வளர்ச்சியை பற்றி . ஒரு உறவில் ஒருவர் வளர்ச்சி அடையவில்லை என்றால் அந்த உறவு இறந்து போன உறவாக தான் கருத வேண்டும் . விவகாரத்து என்பது திருமணத்துடன் சமமாக பார்க்க வேண்டும் . இதற்கு நாம் ready ya ?Relationships are about growth. When one does not grow and are held back in a relationship, it is time to exit. A society that endorses and celebrates transformation, change, birth, learning, peace, happiness, freedom, empowerment and respect must weigh divorce on par with marriage. Rejoice divorce as you would rejoice marriage. Divorce is the birth of change and an opportunity to grow….அதுவரை யதார்த்தமாக அவள் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவள் என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்கிறாள் …