என் தந்தைக்கு மருத்துவர்கள் என்றாலே தனி மரியாதை தான் . தான் ஒரு குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் civil engineer என்றாலும் மனைவியும் சரி மகளும் சரி மருத்துவராகவே இருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். சிறு வயதில் கணக்கு பாடத்திலோ தமிழ் இலக்கணத்திலோ ஒரு சிறு தவறு செய்தாலும் நாள் முழுக்க அதை திருப்பி படித்து எழுத சொல்வார் . கல்வி என்பது அவர் மதிக்கும் கொள்கைகளில் முதல் இடத்தில் இருந்தது.என் தந்தையின் விருப்பப்படி மெட்ராஸ் மருத்துவ கல்லுரியில் ( MMC) 1993 ஆம் ஆண்டு இடமும் கிடைத்தது . மருத்துவர் ஆக வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் . மனநல மருத்துவர் ஆவது என் விருப்பம் . 1999 ஆம் ஆண்டு கல்லூரி முடித்து UK சென்ற நான் என் மருத்துவ பயணத்தை அங்கே தொடர்ந்தேன் . மனநல மருத்துவம் பயின்று SHO மற்றும் 27 வயதிலேயே SPECIALIST REGISTRAR என்ற பொறுப்பையும் ஏற்றேன் . என்ன தான் UK என்ற சிஸ்டத்தில் இருந்தாலும் எப்போதும் என் மனசில் என் தாய் நாட்டை பற்றிய ஏக்கம் தாக்கும் . என்னால் எனக்குள் இருக்கும் தென் இந்திய தமிழ் பெண்ணை மாற்ற முடியவில்லை . என் கூட இருந்த பெண் தோழிகளோ இங்கிலாந்து மக்களை போல accent மற்றும் பாவனைகளோட அழகாக ஆங்கிலம் பேசி சிகை அலங்காரத்திலும் சரி , உடை மட்டுமல்லாமல் உள்ளத்தாலும் இங்கிலாந்து பெண்களாகவே மாறினர் . விரைவில் எனக்கு இந்திய தோழிகள் கூட இல்லாத நிலையில் என்றும் தாய் நாட்டிற்காகவே தவித்தேன் . ஒரு economic refugee யாக இன்னொரு நாட்டில் இருக்கும் தவிப்பு இருந்து பார்த்தவர்களுக்கு நன்கு புரியும் . அங்கே உள்ள subtle racism ( இனவாதம் ) என் மனதை புண்ணாய் படுத்தியது . சுய மரியாதையும் , தன்மானமும் உயிருக்கு மேலாக மதிக்கும் என் போல தமிழச்சிகளுக்கு UK set ஆகாது தான் .திமிராக தான் இருந்தேன் . இருந்தாலும் அங்கே நான் இரண்டாம் குடிமகள் என்பதை தினமும் உணர்ந்தேன் . என் உணவு பழக்கங்கள் , என் அன்றாட வாழ்கை பழக்க வழக்கங்கள் , நான் பார்க்கும் TV channels கூட sun TV , news 7 Tamil ஆக தான் இருந்தது . அங்கே ஜல்லிக்கட்டு போராட்டம் , என் இலங்கை நண்பர்களுடன் இனிய தமிழில் கதைத்தல் போல வாழ்கை ஓடியது .என்னடா இப்படி ஒரு போலியான வாழ்கை தேவையா என்றே மனம் வாட்டி எடுத்தது . நானும் தியாகம் செய்தேன் . போக போக அங்கே அடிமையாக வேலை செய்வதை என்னால் சகித்து கொள்ளவே முடியவில்லை . மனநல மருத்துவம் என் இரண்டாம் காதல் தான் .என் முதல் காதல் என்றுமே சென்னை … சென்னை மட்டும் தான் . Managers என்ற பெயரில் நம்மை விட அறிவும் திறனும் குறைந்தவர்கள் நம் boss ஆக நம்மை கேள்வி கேட்கும் போது போதும் டா சாமி என்றே தோன்றியது . UK யில் ஒன்றே ஒன்று உணர்ந்தேன் . என்னால் employed டா இருக்கவே முடியாது . I am too independent and smart for that . I am born to be a leader and boss . And a boss I am and will be now and always . என்னடா இவ்ளோ திமிரா பேசறாளே அப்படினு நினைப்பீங்க . OK தான் …. நீங்க நினைப்பதில் தவறு இல்லை …எல்லாம் சொந்த மண்ணுல சோறு சாப்பிடற திமிரு தாங்க ….Dr ராதிகா முருகேசன்