ஒரு ஆச்சிரியமான விஷயம் ஒன்று ! பெரியாரை பற்றி அவதூறாக பேசுபவர்கள் அவர் இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்றெல்லாம் இல்லாதது பொல்லாததெல்லாம் பேசுவது வழக்கமாகி விட்டது !ஒருவருக்கு ஒருத்தர் என்ற கோட்பாட்டை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் . உண்மையில் பண்டை தமிழ் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும் காணலாம் .பெரியார் கற்பை பற்றியும் தாலி அணிவது எப்படி ஒரு பெண்ணை அடிமை படுத்துகிறது என்பதை பற்றி மட்டுமே பேசியுள்ளார் . அதற்கு கண்ணு மூக்கு எல்லாம் வைத்து அவர் பேசியதை திரிப்பது வேலையாகிவிட்டது பலருக்கு !சரி . இந்த ஒருவருக்கு ஒருத்தர் கோட்பாடு பற்றிய என் கருத்துக்களை இப்போ பார்க்கலாம் .தாய் வழி சமுதாயத்தில் திருமண முறையானது “பல கணவர் மணம்” எனும் முறையும், பின்னர் “பல தார மணம்” ஆகிய இருவகை திருமணங்களே பெரும்பாலும் நிகழ்ந்ததெனக் குறிப்பிடுவர் .உண்மையில் தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் ஒரு ஆண் மற்ற பெண்களிடம் இருப்பதை அங்கீகரிப்பது மட்டுமன்றி எவ்வாறு அவர்களிடமும் மனைவியிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றது. என்ன கொடுமை பாருங்க !நிலவுடைமை சமூகம் தோன்றிய பின்னரே தன் மனைவி தன் குழந்தைகள் என்ற அமைப்பு நிறுவப்பட்டது .இதில் “பரத்தைகள்” எனப்படும் பொதுமகள்களும் , “காமக்கிழத்தி” எனப்படும் இரண்டாம் மனைவியும் பண்டை தமிழரின் மரபாக விளங்கியது .இதில் இன்னொரு ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால் இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் ! தலைவி அதாவது மனைவிக்கு இந்த மாதிரி எல்லாம் facilities பற்றி பண்டை இலக்கியங்கள் பேசவே இல்லை !பரத்தை எனும் பொது மகள் என்று அழைக்கப்படுவர் அன்று பல categories கூட கொடுக்கப்பட்டிருக்கின்றது.சேரிப்பரத்தையர் காதல் பரத்தையர் என்று வகைப்படுத்தப்பட்டு இப்படியாக வாழ்ந்தது பண்டை தமிழ் சமூகம் !எட்டு தொகை நூல்களில் ஒன்றான நற்றிணை எனும் நூலில் உள்ள பதிவில் பார்த்தீர்கள் என்றால் பாவம் பரத்தைக்கு குழந்தை வைத்துக்கொள்ளும் உரிமை கூட இல்லை! என்றும் அந்த உரிமை தலைவிக்கே உண்டு என்றெல்லாம் “சட்டம்” வகுத்து இந்த ஒருவருக்கு ஒருவர் concept டுக்கு எதிர்மறையாகவே பதிவுகள் இருக்கின்றது .“யாணர் ஊர நின் மாணிழை மகளிரைஎம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்புன்மனத்து உண்மையோ அரிதே அவரும்பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்தநன்றி சான்ற கற்போடுஎம்பா டாதல் அதனினும் அரிதே”- நற்றிணை, 330 (6 – 11)என்ன வேதனை பார்த்தீர்களா ? பரத்தையர் என்பவர் ஆடலிலும் பாடலிலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி இன்பத்தையும் பொருளையும் விரும்பி ஒருவரிடம் செல்லும் பெண்கள் ஆவார். ஆனால் அவளுக்கோ குழந்தை பெற உரிமை இல்லை ! என்ன கொடுமை சார் இது!இதில் இந்த காமக்கிழத்தி என்பவர் second wife of the தலைவன் . அவள் வேறு யாருடனும் சேர மாட்டாள் .இப்படி பண்டை தமிழ் மக்கள் இருக்க எல்லா பொறுப்பையும் பெரியார் தலையில் சுமத்துவது என்ன கொடுமை பார்த்தீர்களா ?சரி . உளவியல் ரீதியாக ஒன்றுக்கு மேலான காதல் காமம் சாத்தியம் தான் என்றாலும் உடல் ரீதியாகவும் , மனரீதியாகவும் , சரியான நெறிமுறை ரீதியாகவும் ஒருத்தனுக்கு ஒருத்தி , ஒருத்திக்கு ஒருவன் என்பது நல்ல ஒன்று தான் . பின்பற்ற வேண்டிய நெறிகளில் ஒன்று தான்.இதில் நான் ஒருவருக்கு ஒருவர் என்ற கோட்பாட்டை ஏன் ஆமோதிக்கிறேன் என்று பதிவிடுகிறேன் .1) நெறி ரீதியாக நம்பிக்கை துரோகம் என்பது மிகவும் கண்டிக்க தக்க வேண்டிய ஒன்று . ஒருவரை ஒருவர் நம்புவதும் மதிப்பதும் காதலுக்கு அடித்தளம் . அதனால் ஒரு உறவில் அதுவும் வாழ்க்கையை சரி பாங்கோடு சமமாக வாழும் வாழ்க்கையில் நம்பிக்கை துரோகத்திற்கு இடம் இருக்க கூடாது .2) உடல் ரீதியாக பலருடன் உறவு என்பது பல வகை நோய்கள் வர அதிக வாய்ப்புகளை கொடுக்கின்றது .3) மனரீதியாக யாருமே தனக்கு உரிய வாழ்க்கை துணையான ஒருவரை பங்கு போட்டு கொள்ள விரும்பமாட்டார் . இப்படி இருக்க ஒரு பந்தத்தை நிலை நிறுத்துவது நம்பிக்கை (trust ) மட்டுமாகவே இருக்க வேண்டும் என்றும் அதற்கு திருமணம் போன்ற சட்ட கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்பதும் என் கருத்து .4) ஒரு வேளை ஒரு பந்தத்தில் இருக்கும் இருவர் பிரிந்து விட்டாலோ , ஒருவர் இறந்து விட்டாலோ மற்றவர் இன்னொரு துணையை தேடுவது இயற்கை மற்றும் அவரவர் விருப்பம் கூட . அப்படி இருக்க அப்போதும் ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்வதே சிறந்த நெறி .உண்மையில் பெரியார் இதை பற்றியெல்லாம் குறிப்பிடவே இல்லை . அப்படி இருக்க இந்த வலைப்பதிவில் எப்படி பண்டை தமிழ் மக்கள் “ஒருவருக்கு பலர்” என்ற கோட்பாட்டில் வாழ்ந்தர் என்பதை அறிந்து கொண்டோம் … பெரியார் போன்ற genius புகழ் என்றும் வாழ்க ….பதிவுகள் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published.