கற்புடன் இருத்தல் என்பதை பெரிய பெருமையாக இன்றும் தான் பேசி வருகிறோம் . கற்பு என்றால் என்ன என்று ஒரு சாமானியனை கேட்டால் தெரியும் அவனோ அவளோ கற்பு என்று குறிப்பிடுவது ஒரு பெண்ணை பற்றிய பண்புகளை மட்டுமே ! ஒரு ஆண் மகன் இந்த கற்பு எனும் பண்பிலிருந்து விதிவிலக்கு என்று விட்டு விட்டது நம் சமுதாயம் !கற்பு என்றால் திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணுடன் உடலுறவு வைத்து கொள்ளாமல் இருப்பது , அதிகம் பேசாமல் இருப்பது , வீட்டிற்கு வரும் வெளி ஆண்களுக்கு முன் வராமல் இருப்பது , கணவன் என்ன சொன்னாலும் தலையாட்டுவது , அவன் சொல் தட்டாமல் நடப்பது என்றெல்லாம் பல உருட்டுகளை பார்க்கலாம் ! இந்த உருட்டுகள் எல்லாம் ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருப்பதை சிந்தித்து அடையாளம் காட்டியவர் நம் அன்புள்ள பெரியார் அவர்கள். இந்த கற்பு எனப்படும் கருத்தியல் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது என்று பார்த்தோமானால் இது தொல்காப்பியதிலேயே (அதாவது 700 BCE இல் தோன்றிய தொல்கப்பியதிலேயே ) பொருளதிகாரத்தில் களவியல் மற்றும் கற்பியலாக கொடுக்கப்பட்டிருக்கிறது .களவியல் என்பது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் சேர்க்கை என்றும் கற்பியல் என்பது மணம் முடிந்த பின் அவர்கள் வாழ்வின் அறநெறி என்பதும் அடங்கும் . இதில் இன்னொரு விஷயத்தை கவனித்தீர்கள் என்றால் திருமணம் என்ற சடங்கு வந்ததே காதலன் காதலியை ஏமாற்றும் குழப்பங்கள் ஆரம்பித்த பின்பு தான் . இந்த கற்பியல் பொருளதிகாரத்தில் ஏற்று கொள்ள முடியாத பல விஷயங்கள் உள்ளன . அதாவது ஒரு கணவன் எப்படி மனைவியை பார்த்து கொள்ள வேண்டும் என்றும் மனைவியோ கணவனை பணி செய்ய வேண்டும் என்றெல்லாம் ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவது போலவே கருத்துக்கள் அமைந்திருக்கின்றது .இதில் கவனிக்க வேண்டிய செய்தி தொல்காப்பியம் எழுதப்பட்டது 700 BCE இல் அல்லவா ? ஆரியர்கள் வருகையோ 1500 BCE ( உங்களுக்கே தெரிந்திருக்கும் BCE என்றால் 1500 என்பது 700 க்கு முந்திய காலம் என்பது. தொல்கப்பியதில் ஆரிய தாக்கம் இருப்பது மறுக்க முடியாத ஒன்று .இது போதாதென்று கீழ்வரும் குறள்களை கவனியுங்கள் .தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.(பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.)பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.(இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.)பார்த்தீர்களா ! ஒரு பெண்ணை அடிமையாக வைக்க என்ன உருட்டு உருட்டுறானுங்க கற்பு அது இதுனு !!இதிலிருந்து மறுக்க முடியாத உண்மை அய்யா சொன்னது போல கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமையாக வைக்கும் நோக்கத்தோடு தான் கருத்தரிக்கப்பட்டது என்று தான் கருத முடியும் .கற்பு எனும் கருத்தியலை நம் மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டால் என்னென்ன சமூக மாற்றங்கள் வரும் ? சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.1) கற்பழிப்பு என்ற வார்த்தை மட்டும் அல்ல ஒரு பெண்ணை பாலியில் ரீதியாக பலாத்காரம் செய்வது அவளை அவமான படுத்துவதாக நினைக்கும் கேவலமான கீழ்த்தரமான எண்ணம் முதலில் ஒழியும் .2) அடுத்து ஒரு பெண் திருமணத்திற்கு முன் காதல் கொள்வதோ உடலுறவு கொள்வதோ அவள் சொந்த விருப்பம் . இதை கற்பு அது இதுனு கொச்சை படுத்தும் அவல நிலை நிற்கும் .3) ஒரு பெண் இந்த சமூகம் தன் கற்பை என்ன சொல்லுமோ என்று துன்புறுத்தும் கணவருடன் அவரை பொறுத்து வாழும் வேதனையான நிலை குறையும்.4) திருமணம் மட்டுமே ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு என்ற நம் சமூகத்தின் கேவல நிலைப்பாடு ஒழியும். 5) பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வெளியே சொல்ல தயங்கும் வேதனை தரும் நிலை யும் ஒரு முற்று புள்ளிக்கு வரும் .கற்பு எனும் கருத்தியல் ஒழிய வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் ? காத்திருங்கள் . பதிவுகளை தொடருவோம்…..