கருப்பு என்பது ஒரு நிறம் . இருந்தாலும் உலகம் முழுவது மட்டுமன்றி நம் நாட்டிலும் கருப்பு என்பது ஒரு பாதகமான விஷயமாக தான் கருதப்படுகின்றது . என்னதான் Fair and lovely என்பது Glow and Lovely என்று பெயர் மாற்றப்பட்டாலும் இன்றும் அந்த முக க்ரீமை வாங்குபவர்கள் தாங்களோ தங்கள் பெண் குழந்தைகளோ வெண்மையான தோற்றத்துடனே இருக்க வேண்டும் என்ற ஆசையிலே தானே அதை வாங்குகிறார்கள் !! அப்படி என்ன இந்த வெள்ளை தோல் மோகம் ?! இன்னும் என்ன ? கருப்பாக இருக்கும் பெண்கள் “double jeopardy ” என்று இரு வகைகளில் பாகுபடுத்த படுகிறார்கள் .அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள் ” சிறுகதை படித்திருந்தால் அதில் இந்த கொடூரம் தென்படும் . எப்போதும் தன்னை அன்பாக நடத்தும் தாய் , தான் கரிய நிறமுடையவள் என்று ஒரு போதும் மனதை நோகடிக்காத தன் தாய் தான் பருவமடையும் போது அது என்ன என்று கூட தெரியாமல் தவிக்கும் போது அப்பொழுது தான் தன் அக்கா மகளின் பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெண் கருப்பு என்பதால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்ட வேதனையில் வீடு திரும்பிய தாய் தன்னை பார்த்து “இப்போ என்ன வேண்டி கிடக்கு இவளுக்கு “என்று மனதை கொலை செய்தது அவளுக்கு மட்டும் அல்ல படிக்கும் நமக்கும் அதீத வேதனையை கொடுக்கக்கூடியதாகவே அமைகிறது .இந்த tall ,dark and handsome என்பது ஏன் ஆண்களை மட்டும் குறிக்க வேண்டும் ? ஆண்களாக இருக்கும் பட்சத்தில் கருப்பாக இருப்பது அழகு , ஆண்மை என்றெல்லாம் கூறும் நம் சமூகம் ஒரு பெண் கருப்பாக இருந்தால் ஒன்று கிண்டலடிப்பதோ அல்லது ஒரு பொருட்டே இல்லாதது போல நடத்துவதும் ஏன் சகஜமாக இருக்கிறது ?அதுவும் சிவாஜி படத்தில் பார்த்தீர்கள் என்றால் நம்ம சிவாஜி அங்கவை சங்கவை எல்லாம் love பண்ண மாட்டார் . sreya மாதிரி stereotyped version of fair, slim and (so called) beautiful women னை மட்டுமே love பண்ணுவது போல மேலும் இந்த பாகுபாட்டிற்கு நம் சினிமா உலகத்தில் கதாநாயகிகளை சித்தரிக்கும் விதம் கூட காரணம் .நம் தமிழ் சினிமாக்களில் பெரும்பாலும் வெள்ளையான வட மாநில பெண்களே கதாநாயகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் . கருப்பான பெண் கதாநாயகியாக வேண்டும் என்றால் அது ஒரு exception (கதைக்கு தேவை பட்டால் மட்டுமே !). இது சமுதாயத்திற்கு கொடுக்கும் செய்தி ( or message )… வெள்ளை நிறத்தோடு இருக்கும் பெண்களே அழகானவர்கள் ; ஆண்களால் விரும்பத்தக்க தகுதி உடையவர்கள் என்று தானே வலியுறுத்திகிறது ? இந்த கண்ணோட்டம் மாற வேண்டும் . முதலில் அழகு என்பதை நிறத்துடனோ , உடல் அமைப்புடனோ சம்பந்தப்படுத்தி பார்ப்பதை தவிர்த்து every man and woman are unique and beautiful in their own way and deserve to be loved by the right person… என்ற கருத்தை பதிவு செய்கிறேன் . மீண்டும் ஒரு பதிவில் பார்க்கலாம் ….

Leave a Reply

Your email address will not be published.